ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் குளச்சல் நகர அதிமுக முடிவு
குளச்சல்,அக்.8: குளச்சல் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், நகர முன்னாள் செயலாளர் அருள்தாஸ், அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை செயலாளர் முகம்மது தலின் வரவேற்று பேசினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் எஸ்.எம்.பிள்ளை, இணை செயலாளர் முருகேசன், துபாய் மாகீன், சிலுவை மேரி, பெலிக்ஸ் ராஜன், சூசை மரியான், செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குமரி கடற்கரை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவது, உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement