குமரியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
நாகர்கோவில், ஆக. 1: குமரி மாவட்டத்தில் இன்று (1ம் தேதி) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி 11வது வார்டுக்கு வடசேரி சிவகாமி அம்மாள் திருமண மண்டபம், கொல்லங்கோடு நகராட்சி வார்டு 1, 2, 3க்கு சிலுவைபுரம் ஜேசி சமூக நலக்கூடம், அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு எட்டாமடை ஆர்.சி. மண்டபம், திருவட்டார் பேரூராட்சிக்கு ஏற்றக்கோடு மாத்தார் சமுக நலக்கூடம், குருந்தன்கோடு ஊராட்சிக்கு குருந்தன்கோடு பூமி பாதுகாப்பு சங்க கட்டிடம், முழுகோடு ஊராட்சிக்கு புண்ணியம் உத்திரம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.