அருவிக்கரையில் ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை தொடங்கி வைத்தார்
குலசேகரம், ஆக.1: அருவிக்கரை ஊராட்சி கோழிவிளையில் உள்ள துணை சுகாதார நிலையம் இடவசதி இல்லாத சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக புதியதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனையடுத்து இந்த துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அருவிக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சலேட் கிறிஸ்டோபர், ஜாண் கிறிஸ்டோபர், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் சந்தோஷ், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஜீனோ ஆன்டனி, மாவட்ட திமுக விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் சுரேஷ், குமரன்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் பால்சன், சுருளகோடு ஊராட்சி முன்னாள் தலைவர் விமலா சுரேஷ், அருவிக்கரை ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.