மக்கள் குறைதீர் கூட்டத்தில் 285 மனுக்கள்
நாகர்கோவில், ஜூலை 29: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 285 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட கலெக்டர் அழகுமீனா துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி ஆணையர் (கலால்) ஈஸ்வரநாதன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.