மயிலாடி கிராமத்தில் மறுநில அளவை பணி
நாகர்கோவில், ஜூலை 29: கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மறு நில அளவை அலுவலகத்தில் இருந்து கடந்த 23ம் தேதி முதல் மயிலாடி கிராமத்தில் மறுநில அளவை பணி நடைபெற்று வருகிறது. நில அளவர்கள் தங்கள் பகுதிக்கு அளவை பணி மேற்கொள்ள வரும்போது நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து மறுநில அளவையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தங்களுடைய கிரய ஆவணத்தின்படி பட்டா மாறுதல் செய்தல், கூட்டு பட்டாவில் இருந்து உட்பிரிவு செய்து, தனிப்பட்டா மாற்றம் செய்தல், பட்டாவில் பெயர் சேர்த்தல், பரப்பு பிழைகள், தங்களது எல்லை அளவுகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். நில அளவை பணி மேற்கொள்ள வரும் நில அளவர்களுக்கு தேவையான ஆவணங்கள் வழங்கியும், எந்த ஒரு இடையூறும் ஏற்படா வண்ணம் மறு நில அளவை பணி சுணக்கமில்லாமல் முழுமை பெற ஒத்துழைப்பு நல்க வேண்டும்.