உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உளுந்து விதை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்
நாகர்கோவில், ஜூலை 28: அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வடக்கு தாமரைகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை ஊட்டுச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத்தொகுப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட வருவாய் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன், விவசாயிகள் கடோரப்பா, செல்லையா ஆகியோருக்கு முழு மானியமாக வம்பன் 8 ரக உளுந்து விதைகளை வழங்கினார்.
இதில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுனில்தத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு வேளாண்மை தென்னை நுண்ணூட்ட உரம் டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ், திரவ உயிர் உரம், ரைசோபியம், துத்தநாகம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டது.