திருவட்டாரில் காங்கிரசில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
திருவட்டார்,ஜூலை 24: திருவட்டார் அருகே பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 25 பேர் விஜய் வசந்த் எம்பி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருவட்டார் நகர காங்கிரஸ் சார்பில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா பாரதப்பள்ளி அருகே நடந்தது. உடற்பயிற்சியாளர் மெர்ஜின் சிங் தலைமை வகித்தார். திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் ஜெபா முன்னிலை வகித்தார்.
விழாவில் விஜய் வசந்த் எம்பி முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 25 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். விழாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரத்தினகுமார், ஜாண் சேவியர், தங்கநாடார், ஆற்றூர் குமார், கனகராஜ், செறுகோல் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் அச்சுதன், திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சேம் மார்ட்டின், குஞ்சுமணி, வினு குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.