காவல் துறை வாகனங்கள் ஏலம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட மூன்று மற்றும் 6 இரு சக்கர காவல் வாகனங்கள் மேலும் நான்கு சக்கர காவல் வாகனங்களை தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 31.7.2025ம் தேதி காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 31.7.2025 காலை 10 மணிக்கு முன் பணமாக ரூ.1,000ம் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து உடனே செலுத்த வேண்டும். மேலும் விவரங்கள் தெரிந்துக்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை அலுவலக தொலைபேசி எண்: 94981 46628, 88254 65897 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.