அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்
செங்கல்பட்டு, டிச.5: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 அடி தூரத்திற்கு இடிந்து கீழே விழுந்தது. சுவர் இடிந்து...
கூடுவாஞ்சேரி கீரப்பாக்கம் ஊராட்சியில் சலசலப்பு உடைந்த பைப் லைன்களை மாற்ற அதிகாரிகள் மறுப்பு
கூடுவாஞ்சேரி, டிச.5: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் ஓட்டை விழுந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் கலங்கி விடுகிறது. இதனை...
தொடர் நீர்வரத்து காரணமாக அருவிபோல் காட்சியளிக்கும் தையூர் ஏரி: பொதுமக்கள் குளியல் போட்டு ஆட்டம்
திருப்போரூர், டிச.4: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தையூர் ஏரியில் நீர் நிரம்பி வழிந்து அருவிபோல் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், பொன் விளைந்த களத்தூர் ஆகிய ஏரிகளுக்கு அடுத்து தையூர் ஏரி மூன்றாவது பெரிய ஏரியாக விளங்குகிறது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை...
கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் அகற்றம்
திருப்போரூர், டிச.4: கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையில் வழிந்தோடிய மழைநீர் மோட்டார் வைத்து, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கையால் அகற்றப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் சினேகா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கடந்த இரு நாட்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள நகர், கனக பரமேஸ்வரன் நகர், அஜித்நகர்,...
கார்த்திகை தீபத்தன்று பூக்கள் விலை கடும் சரிவு
குன்றத்தூர், டிச.4: சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்களை வாங்க மக்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால் நேற்று காலை பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.2,500யில் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கும், ஐஸ் மல்லி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.1,500க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி...
வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகள் மாயமானதால் மழைநீர் செல்வதில் சிக்கல்
கூடுவாஞ்சேரி, டிச.3: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் அடங்கிய காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில், வண்டலூர், ஓட்டேரி, ஓட்டேரி விரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சியில் உள்ள வண்டலூர் மலையானது சுமார் மூன்றரை கிமீ நீளமும், ஒன்றரை கிமீ அகலமும் இயற்கை தோற்றத்துடன் பசுமையாக...
போதையில் மனைவியை தாக்கியபோது தடுத்த மாமியார் சுத்தியலால் அடித்து கொலை
காஞ்சிபுரம், டிச.3: காஞ்சிபுரம் அருகே மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியபோது தடுக்க வந்த மாமியாரை சுத்தியால் அடித்துக்கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அருந்ததி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (60). இவரது மனைவி சந்தவள்ளி (54). இவர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி...
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி திருட்டு முயற்சி எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
காஞ்சிபுரம், டிச. 3: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில் தங்க பல்லி, தங்க சந்திரன், தங்க சூரியன், வெள்ளி பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன. இவற்றை திருட முயற்சி நடந்துள்ளதாக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி...
காஞ்சிபுரம் அருகே சோகம் பாலாற்றில் மூழ்கி வாலிபர் பலி
காஞ்சிபுரம், டிச.2: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் குளித்த வாலிபர், நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணி என்பவரது மகன் சிவா (35). எலக்ட்ரானிக் தராசுகள் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்....