துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரத்தில், துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உததிமுக தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் தலைமையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டம், திமுக வடக்கு ஒன்றியம் இந்திரா நகர் கிளை சார்பில், தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.வி.ரமேஷ் ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், திமுக தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் தலைமையில், 448 நபர்களுக்கு பிரியாணி, 248 நபர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் ராம்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் சைலஜா சேகர், திமுக நிர்வாகிகள் முட்டவாக்கம் மனோகரன், ஆடலரசு, சி.எஸ்.விஜி, ராஜசேகரன், நித்தியா, பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.