மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்
திருப்போரூர், ஆக.2: செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் திருப்போரூரில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா லோகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லோகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் செப்.15ம் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் திரளாக கலந்துக்கொள்ளுதல், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு உழைத்தல், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகளை வைத்திருக்க மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுதல், கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த கேட்டுக் கொள்ளுதல், கோவளத்தை கடற்கரை சுற்றுலா நகரமாக அறிவிக்க கோருதல், நெம்மேலி அரசு கல்லூரி மாணவர்களுக்கு தேவையான தடங்களில் மினி பேருந்து இயக்கக் கோருதல் ஆகியன
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் தேசிங்கு, செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சம்சுதீன், ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் சாஞ்சி சேகர், சந்திரசேகர், திருப்போரூர் நகர செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.