நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு, ஆக. 4: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக 2 எண்ணிக்கை பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களின் தகுதி பணி விவரங்கள் ஆகிய வற்றை https://chengalpattu.dcourts.gov.in இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் https://chengalpattu.dcourts. gov.in இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்டு 14.8.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.