திமுக மாணவர் அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
காஞ்சிபுரம், ஜூலை 24: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களை ஒன்றிணைக்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்னும் மாபெரும் முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவர் அணி துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பரப்புரை பிரசாரம் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்செல்வன் தலைமையில், கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை பிரசுரம் செய்தனர்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மாநகர மாணவரணி அமைப்பாளர் பாரதிதாசன், துணை அமைப்பாளர்கள் பெருமாள் பிரேம்குமார், ஆகாஷ்ராம் நந்தினி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய மாணவர் அணி நிர்வாகிகள் விசார் தமிழரசன், நிர்மல்குமார், மணிகண்டன், பகுதி மாணவரணி நிர்வாகிகள் யுவராஜ், ஷாம், சந்துரு, மோகன்ராஜ், ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.