காஞ்சிபுரம் 32வது வார்டில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: எஸ்பி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க விதமாக பிரதான இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பகுதிக்கு உட்பட்ட 9 தெருக்களில் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 3வது மண்டலக்குழு தலைவர் சாந்தி சீனிவாசன் வரவேற்றார், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணைமேயர் குமரகுருநாதன், மாநகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, கார்த்தி, சங்கர், கமலக்கண்ணன், பானுப்பிரியா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்மூலம், நாகலூத்து தெரு, நாகலூத்து பின்தெரு, மந்தவெளி, கோட்ராம்பாளையம் தெரு, அஷ்டபுஜம் தெரு, அஷ்டபுஜம் சன்னதி தெரு, தும்பவனம் தெரு. தங்கவேல் தெரு ரமணா அவெண்யூ, ஆகிய 9 தெருக்களில் சிசிடிவி கேமரா பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.