நத்தம் குட்டுப்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி அன்னதானம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
நத்தம், ஜூலை 25: நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது வெங்கல நாச்சி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று விவசாயம் செழிக்க வேண்டி அன்னதான விழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி கோயிலில் அன்னதான விழா நடைபெற்றது.
முன்னதாக வெங்கல நாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அன்னதானம் துவங்கியது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணவருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஒத்தினிப்பட்டி, பஞ்சையம்பட்டி, லெட்சுமிபுரம், ஒ.புதூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.