உறுப்பு கல்லூரிகள் பொதுக்குழு கூட்டம்
கொடைக்கானல், ஆக. 7: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 13 கலை கல்லூரிகளுக்கான 2025- 2026ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜம் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா தொடக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் கலா தலைமை வகித்து பேசியதாவது, ‘மாணவிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற்று...
தீ வைத்த 21 பேர் மீது வழக்கு
வடமதுரை, ஆக. 7: அய்யலூர் கருஞ்சின்னானூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பகவதியம்மன், பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்ள அரசியல் பிரமுகர்களை அழைத்து வரக்கூடாது என ஊர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விழா கடைசி நாளில் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதை கண்டித்து உள்ளூரை சேர்ந்த சிலர் கட்சியினரின்...
மாநில வூசு போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
திண்டுக்கல், ஆக. 6: கோயம்புத்தூரில் கேலோ இந்தியா மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் மாநில அளவிலான வூசு உமன் லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 18 மாணவிகள், பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் கலந்து கொண்டனர்....
அகரம் கோட்டூர் ஆவாரம்பட்டியில் மயானத்திற்கு இடவசதி செய்து கொடுத்த அமைச்சருக்கு நன்றி
திண்டுக்கல், ஆக. 6: திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கோட்டூர் ஆவாரம்பட்டியில் உள்ளது ஆதிதிராவிடர் நகர். இப்பகுதி மக்கள் மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்து தர கோரி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அமைச்சர், உடனே அப்பகுதி மக்களுக்கு மயானத்திற்கு இடவசதி செய்து கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி...
நத்தம் ஒத்தினிப்பட்டி வடகாட்டான் கோயிலில் ஆடி படையல் திருவிழா
நத்தம், ஆக. 6: நத்தம் அருகே, ஒத்தினிப்பட்டி வடகாட்டான் கோயில் ஆடி படையல் திருவிழாவில் 5 ஆயிரம் ஆண்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது. நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சி ஒத்தினிப்பட்டியில் அமைந்துள்ள வடகாட்டான் கோயிலில் விவசாயம் செழிக்கவேண்டி ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் படையல் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி படையல் விழா நேற்று முன்தினர்...
மண்பானை நல்லது
பழநி, ஆக. 5: மண்பாண்டங்களில் இயற்கையாகவே பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மண்பானை தண்ணீர் இயற்கையானது. குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து, நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம். மண் பானைகளில் சமைத்து சாப்பிட்டால் வியாதிகள் வராது. மண் பானை மருத்துவ குணமுடையது. மண்பானை தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம் என இயற்கை...
கலெக்டரிடம் மக்கள் மனு
திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஜம்புளியம்பட்டியில், விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் கோயிலை சுற்றியுள்ள பகுதி மற்றும் சிலுவத்தூர் ரோட்டில் அரசுக்கு பாத்தியப்பட்ட வண்டிப் பாதையை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். அதனை அகற்றி தர வலியுறுத்தி கலெக்டர் சரவணனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பாலகிருஷ்ணாபுரம் 7வது வார்டில்...
சின்னக்காம்பட்டியில் ஆக. 7ல் ‘பவர் கட்’
ஒட்டன்சத்திரம், ஆக. 5: ஒட்டன்சத்திரம் வட்டம் சின்னக்காம்பட்டி 22 கே.வி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, ஆக.7ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஐ வாடிப்பட்டி, கொங்கபட்டி,நவகானி, இடையன் வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, கொ. கீரனூர், சாமியாடிபுதூர், நரசிங்கபுரம், ஜவ்வாதுபட்டி, பாறைப்பட்டி,...
அய்யலூரில் ஆலோசனை கூட்டம்
வேடசந்தூர், ஆக. 4: அய்யலூர் பேரூர் திமுக சார்பில் வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் கருப்பன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல், தலைமை அறிவுறுத்தலின்படி கட்சி வேலைகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து...