மஞ்சப்பை விநியோகம்
நிலக்கோட்டை, ஜூலை 28: ஆத்தூர் அருகே சேடபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை தவிர்க்க வலியுறுத்தி நீர்நிலைகள் பாதுகாப்பு தன்னார்வ குழுவினர் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழு தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள் புவனேஸ்வரி, ரமாபிரபா, விமலா ரோஸ்லின், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழு பொறுப்பாளர் சதீஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் பொன்ராஜ், முனிராம், ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.