மாணவிகளுக்கு அழைப்பு நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் ‘ஸ்பாட் அட்மிசன்’
நிலக்கோட்டை, ஜூலை 30: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சீனிவாசகன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவிகள் நேரடியாக வந்து சேரலாம். கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கு பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வரலாறு, பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், மனையியல், புவியியல் போன்ற 12 இளநிலை பட்டப்படிப்பில் காலியிடம் உள்ளது.
இந்த பாடப்பிரிவுகளில் சேர விருப்பமுள்ள மாணவிகள் நேரடியாக கல்லூரியின் மாணவியர் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்ந்து கொள்ளலாம். மேலும், இக்கல்லூரியில் 10 முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ தமிழ், ஆங்கிலம், பொருளியல், எம்.காம், எம்.எஸ்சி கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், மனையியல், புவியியல் ஆகிய பட்டப்படிப்புக்களில் சேர விரும்பும் மாணவிகள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு கல்லூரியின் மாணவியர் சேர்க்கை உதவி மையத்தை அணுக
லாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.