மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் படுகாயம்
வேடசந்தூர், ஆக. 2: வேடசந்தூர் அருகே திருக்கம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (37). தனியார் நூற்பாலை எலக்ட்ரீசியன். நேற்று நூற்பாலையில் உள்ள மின்பெட்டியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில்சசிகுமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் படுகாயமடைந்தார். உடனே சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.