திண்டுக்கல்லில் மதிமுக செயற்குழு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 1: திண்டுக்கல்லில் மதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராகவன் வாழ்த்தினார். கூட்டத்தில், பொது செயலாளர் வைகோ 30 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதையொட்டி அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு வரும் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன், கட்சியினர் ஏராளமானோர் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வரும் செப்.15ம் தேதி திருச்சியில் நடைபெறும் அறிஞர் அண்ணா 117வது பிறந்த தின விழா பொது கூட்டத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் நள தமயந்தி, மாநகராட்சி கவுன்சிலர் காயத்ரி. ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.