பழநியில் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழநி, ஆக. 1: பழநி நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ஜோதிமுருகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பழநி கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கு சீருடை, காலணி ரெயின் கோட், தளவாட பொருட்கள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணை நிர்வாகிகள் முத்துப்பாண்டி, ரமேஷ், ஜெயப்பிரகாஷ், சக்திவேல், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.