வளர்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு
காரிமங்கலம், ஜூலை 31: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், பூசாரி முருகன் மற்றும் பலர் செய்திருந்தனர்.