குறைதீர் நாள் கூட்டத்தில் 524 மனுக்கள் குவிந்தன
தர்மபுரி, டிச.9: தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். இதில் பொதுமக்களிடம் இருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை...
சபரிமலைக்கு 749 கிமீ தொலைவு நடைபயணம்
அரூர், டிச.9: கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்த 6 பக்தர்கள் அடங்கிய குழுவினர், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து விட்டு, அங்கு இருந்து இருமுடியை சுமந்தவாறு சபரிமலைக்கு நடைபயணமாக செல்கின்றனர். திருப்பதியில் கடந்த 30ம் தேதி பயணம் துவங்கிய அவர்கள் 22.12.2025 ம் தேதி சபரிமலை தரிசனம் செய்கின்றனர். திருப்பதியில் 749 கிமீ தூரத்தை...
வேளாண் நலத்திட்டங்களை பெற பதிவு செய்ய வேண்டும்
அரூர், டிச.8: மொரப்பூர் வட்டார விவசாயிகள், வேளாண் திட்டங்களை எளிதில் பெறும் வகையில், வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மொரப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பழனிவேல் கூறியதாவது: மொரப்பூர் வட்டாரத்தில் உள்ள மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், தென்கரைகோட்டை பிர்காவில் உள்ள அனைத்து...
கஞ்சா விற்ற வாலிபர் கைது
தர்மபுரி, டிச.8: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி சேலம் மெயின்ரோடு, நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி மேம்பாலத்தில், ரோந்து போலீசாரை பார்த்ததும், வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை விரட்டிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது....
தர்மபுரி உள்பட 4 மாவட்டங்களில் சுகாதார துறை தீவிர கண்காணிப்பு
தர்மபுரி, டிச.8: கர்ப்பிணிகளை இரவில் வரவழைத்து கருவின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பலை பிடிக்க, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், பேளூர் பகுதியில் மாவட்ட சுகாதார துறையினர் கடந்த 2ம்தேதி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு வீட்டில் நவீன ஸ்கேன் மிஷினை வைத்து கருவில்...
விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு
தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பூச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரம்யா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 1ம்தேதி வீட்டு மாடியில் துணிகளை காயபோடுவதற்காக ரம்யா சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த...
டூவீலரில் வந்து ஆடு திருட முயன்ற 3 பேருக்கு வலை
அரூர், டிச.7: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி பாரதி. விவசாயியான இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் பாரதி மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி ஆகியோர் தூக்கம் விழித்து...
மேலாண்மைக்குழு கூட்டம்
பென்னாகரம், டிச.7: ஒகேனக்கல் ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் வேதா, துணைத்தலைவர் சத்யா ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன், கூட்டத்தின் நோக்கம் பற்றியும், பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கினார். கூட்டத்தில் பள்ளியின்...
இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறகணிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, டிச.6: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 55க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர். கோர்ட்டில் வழக்கீல்கள் வழக்குகளை இ-பைலிங் முறையில் முதலில் பதிவுசெய்ய வேண்டும் எனும் நடைமுறை கடந்த 1ம்தேதி முதல் கோர்ட்டில் நடைமுறைக்கு வந்தது. இதை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று...