தரைமட்ட பாலங்களை பராமரிக்கும் பணி தீவிரம்
தர்மபுரி, ஜூலை 31¬: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளில் 200க்கும் மேற்பட்ட தரைமட்ட பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களை பராமரிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜூ அறிவுறுத்தலின் பேரில் துவங்கியுள்ளது. இந்த பணியில் பாலங்களுக்கு வர்ணம் பூசுதல், பாலங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை போர்டுகள் வைத்தல், தூர்வாருதல் மற்றும் சாலையில் எல்லை கோடுகள் ஆகியவை வரையும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் மழை காலத்திற்கு முன்பு, சிறு பாலங்களை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.