பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
காரிமங்கலம், ஆக.1: காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தற்போது நடந்து வரும் மக்கள் நலத்திட்ட பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை பணிகள் உட்பட பல்வேறு அடிப்படை பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ள கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், சுரேந்திரன், மாதப்பன், சிவக்குமார், நாகம்மாள், ராஜம்மாள், சக்தி ரமேஷ், கீதா பிரியா சங்கர், இந்திராணி ராமச்சந்திரன், ராதா ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.