தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாவட்டத்தில் ரூ.24.22 கோடியில் 173 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக, ரூ.24.22 கோடி மதிப்பீட்டில் 173 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் பிரச்னை கடுமையாக இருந்தது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு மட்டும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பிரதான குழாய் மூலம் 2 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. நகராட்சி தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புளோரைடு கலந்த நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர். புளோரைடு கலந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள், கறை படிந்த பற்கள், முடக்கு வாதம், மூட்டுவலி, காதுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, கடந்த திமுக ஆட்சி காலத்தில், 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ரூ.1928.80 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், அவசர கதியில் கடந்த 2013ம் மார்ச் 19ம்தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரப்பகுதி மற்றும் சில கிராமங்களில் மட்டும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் சென்றடைந்தது. ஊரக பகுதிகளில் இத்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை. இதனால் ஊரக பகுதிகளில் உள்ள கிராம மக்கள், ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.7,890 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை அறிவித்தார். தற்போது அலுவலக ரீதியான பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே, ஒனேக்கல் கூட்டுகுடிநீர், பெரும்பாலும் பழைய நீர்தேக்க தொட்டிகள் மூலமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால், தற்போது கிராமங்கள் தோறும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 150 நீர்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தினசரி 1400 லட்சம் லிட்டர் (140 எம்எல்டி) தண்ணீர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் தற்போது விநாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வருகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கிடைக்க, 2ம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.24.22 கோடி மதிப்பீட்டில் 173 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 150 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 23 நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. புதியதாக கட்டப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டிகளில், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலத்தடி நீர் தேக்கி வைக்கப்பட்டு, தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related News