புதுச்சேரி அருகே பரிதாபம் பல் மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சரி அருகே பல் மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர், சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிதேவன் (50). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டீனாக உள்ளார். இவரது மகன் கார்த்திக் ராஜா (24). அரியூர் பகுதியில் தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில் அவர் கல்லூரியில் அதிகளவு படிக்க வேண்டி இருந்ததால் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஹரிதேவன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கார்த்திக் ராஜா தனது வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹரிதேவன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ேபாலீசார் விரைந்து வந்து கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனவிரக்தியில் கார்த்திக்ராஜா இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.