மாத்திரைகளை மாற்றி சாப்பிட்ட பெண் சாவு
காட்டுமன்னார்கோவில், ஆக. 2: காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி முத்துக்குமரன்(33,). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தைச் சேர்ந்த வினோதினிக்கும் (30) கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இவரது வீட்டில் முத்துக்குமரனின் தங்கை புவனேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இதற்கிடையே வினோதியும் தன்னுடைய உடலுக்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று வினோதினி தனது கணவர் வீட்டில் தன்னுடைய மாத்திரையை சாப்பிடுவதற்கு பதிலாக புவனேஸ்வரியின் மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அங்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால், சிதம்பரம் ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.