புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
புவனகிரி, ஜூலை 24: புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக தனுஷ்கோடி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்னையில் இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியை சஸ்பெண்ட் செய்து பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. புவனகிரி பேரூராட்சியின் செயல் அலுவலராக தனுஷ்கோடி சில மாதங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்றார். அதற்குள்ளாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.