மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் நாட்டு துப்பாக்கியுடன் 2 வாலிபர்கள் கைது
திண்டிவனம், ஜூலை 26: திண்டிவனம் அடுத்த மொரட்டாண்டி சுங்கசாவடி அருகே நேற்று அதிகாலை ஆரோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் அர்ஜுன் (24), ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (23) என்பதும், இருவரும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி காட்டுப்பகுதியில் முயலை வேட்டையாடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் திண்டிவனம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.