கோவை மாநகரில் அதிரடி சோதனை: குட்கா விற்ற பெண் உட்பட 9 பேர் கைது
கோவை,ஜூலை31: கோவை மாநகர போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு குட்கா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 9 பேரை கைது செய்தனர். கோவை மாநகரில் ஆர்எஸ் புரம்,வெரைட்டி ஹால் ரோடு,காட்டூர்,சாய்பாபா காலனி,துடியலூர், பீளமேடு போலீசார் நேற்று முன்தினம் அவர்களது போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்காவை பதுக்கி வைத்து விற்பணையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதன் படி ஆர்எஸ் புரம் போலீசார் சண்முகம் ரோட்டில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற மாணிக்கம் (39), ராபட்சன் ரோட்டில் ராஜா (39) ஆகியோரையும், வெரைட்டி ஹால் ரோடு போலீசார் பஞ்சாப்பை சேர்ந்த கிருஷ்ணா சர்மா (33) என்பவரையும்,காட்டூர் போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த சேர்சிங் (48), மங்கிலால் (30) ஆகியோரையும், சாய்பாபா காலனி போலீசார் வேலாண்டிப்பாளையத்தில் மளிகை கடையில் குட்கா விற்ற லட்சுமி (50),துடியலூர் போலீசார் காளிராஜன் (40), பீளமேடு போலீசார் செல்வராஜ் (45), மற்றும் கேரளாவை சேர்ந்த ஹேமா சேட்டன் (63)ஆகியோரையும் கைது செய்தனர். ஒரே நாளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு பெண் உட்பட 9 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.