மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ரத்து
கோவை, ஆக.5: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இதேபோல், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த...
வேளாண் பல்கலை.யில் உயிர்ம வேளாண் பயிற்சி
கோவை, ஆக. 5: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு நாள் உயிர்ம வேளாண்மை பயிற்சி வரும் 7ம் தேதி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.700 ஆகும். இந்த பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 0422 2455055/ 6611206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பயிற்சிக்கு...
கேஸ் அடுப்பு வெடித்து மூதாட்டி பரிதாப பலி
கோவை, ஆக. 4: கோவை ஆர்எஸ் புரம் அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (85). இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்க மறந்து விட்டார். இதனால் கேஸ் அடுப்பு வெடித்து மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த அவரது மகன் மனோகர்,...
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டாஸ்
கோவை, ஆக. 4 : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், ஸ்பா நடத்தியும் இளம் பெண்களை விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மதன் கண்ணன் (37), திண்டுக்கலை சேர்ந்த அறிவழகன் (30), மதுரையை சேர்ந்த கோபிநாத் (34) ஆகியோர் கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள்...
மாவட்டத்தில் விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோவை, ஆக. 4: கோவையில் விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. மாவட்ட அளவில் கடந்த சில மாதங்களாக பட்டியலில் பெயர் சேர்க்க மனுக்கள்...
கட்டுமான பொருட்களை சாலையில் வைத்து பணி செய்தால் அபராதம்
கோவை, ஆக. 3: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுமான பொருட்களை சாலைகளில் வைத்து பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. கோவை நகரில் சில இடங்களில் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் ஜல்லி, மணல், கம்பி உள்ளிட்ட பொருட்களை சாலையில் வைத்து பணி மேற்கொள்வதாகவும், இதனால் பொதுமக்கள்...
பில்லூர்-3 திட்டத்தின் குடிநீர் விநியோகத்தை கமிஷனர் ஆய்வு
கோவை, ஆக.3: கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3, சிறுவாணி, ஆழியார் மற்றும் பவானி ஆகிய 6 குடிநீர் திட்டங்கள் மூலமாக சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றின் சமயபுரம்...
விபத்தை தவிர்க்க டிவைடர் தேவை
கோவை, ஆக.3: கோவை நகரில் பல இடங்களில் சிக்னல்கள் பழுதான நிலையில் இருக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ரோட்டை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக, மேம்பால பணிகள் நடக்கும் இடங்களில் சிக்னல்கள் அகற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சிக்னல்கள் இயங்கவில்லை. யு டர்ன் அதிகமாக்கப்பட்ட இடங்களில் போதுமான அளவு டிவைடர் வைக்கப்படவில்லை. போக்குவரத்து...
உலக நலன் வேண்டி பால்குட ஊர்வலத்தில் 500 பெண்கள் பங்கேற்பு
மேட்டுப்பாளையம், ஆக.2: மேட்டுப்பாளையம் பால்குட பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பில் உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 17 வது ஆண்டு பால்குட ஊர்வலம் மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோயிலில் இருந்து நேற்று துவங்கியது. ஊர்வலத்தை விழா குழு தலைவர் பாஸ்கர்...