தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோமனூரில் ஆடு, கோழிகளை திருட முயற்சித்த ஒருவர் சிக்கினார்; 3 பேர் ஓட்டம்

 

சூலூர், ஆக.2: சோமனூர் பகுதியில் ஆடு, கோழி திருட முயன்ற 4 பேரை பொதுமக்கள் துரத்தினர். இதில் ஒருவர் பிடிபட்டார். மேலும் 3 தப்பி ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சோமனூர், சேடபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் சுப்பிரமணியம். தனது வீட்டின் அருகே சாலை அமைத்து ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென ஆடுகளின் சத்தம் அதிகமாக கேட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் வெளியே வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த 4 நபர்கள் அவரது சாலைக்குள் நுழைந்து ஆடுகளைத் திருட முயற்சிப்பது தெரியவந்தது. இந்நிலையில் சுப்பிரமணியம் வருவதை பார்த்ததும், 4 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதில், ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

பிடிபட்ட அவரை விசாரித்ததில், அவரது பெயர் தீபக் என தெரியவந்தது. மேலும் 3 பேர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் காயமடைந்த தீபக், அப்பகுதியினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

 

Related News