கோவை நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 29: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக வக்கீல் வாஞ்சிநாதன் மீது கொடுத்துள்ள வழக்கினை, உடனடியாக கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (ஜேஏஏசி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலின் முன்பு வக்கீல் மீது போடப்பட்ட வழக்கினை கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜேஏஏசி மாநில தலைவர் வக்கீல் நந்தகுமார் மற்றும் கோவை வக்கீல் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சதீஷ் உள்ளிட்ட வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.