தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு ஒடிசாவில் கஞ்சா வாங்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை: திருவள்ளூர் அருகே பெற்றோர்உறவினர்கள் சாலை மறிய

சென்னை: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன்ஒடிசா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில்உடலை மீட்கக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா வாங்கிக்கொண்டு வரும் போது 5 பேர் கும்பல் அடித்துக் கொன்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரி. இவரது மனைவி ஜோதி. தம்பதியரின் 2வது மகன் அஜய். ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றுபடிப்பை பாதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர்கடந்த 27ம்தேதி கொடைக்கானலுக்குநண்பர்களுடன் டூருக்கு போவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால்செங்குன்றத்தை சேர்ந்த கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி அபினேஷ் என்பவருடன்அஜய் கஞ்சா வாங்குவதற்கு ஒடிசாவிற்கு சென்றுள்ளார். அப்போதுஒடிசாவில் 3 கிலோ கஞ்சாவை ஒரு பிரிவினரிடமிருந்து வாங்கிக்கொண்டுரயில்வே டிராக்கில் நடந்து வரும்போது ஒடிசாவை சேர்ந்த மற்றொரு பிரிவைச் 5 பேர் கொண்ட கும்பல்இவர்களை துரத்தியுள்ளனர்.

இதில்அபினேஷ் தப்பித்துச் சென்றதாகவும்அஜய் அவர்களிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்துஅஜய்யை பிடித்து வைத்துக்கொண்ட ஒடிசாவை சேர்ந்த 5 பேர் கும்பல்ரூ.5 லட்சம் கொடுத்தால் உயிருடன் விடுவோம் என அஜய் வீட்டிற்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அஜய்யின் பெற்றோர்கள்இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்மீண்டும் அஜய்யின் போனில் தொடர்பு கொண்டபோதுபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சந்தேகத்தில் மீண்டும் மகன் அஜய்யுடன் சென்ற அபினேஷ் என்பவரை விசாரிக்கும்போதுஅஜய்யை கொன்று விட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். டூருக்கு செல்வதாக சென்ற தனது மகன் ஒடிசாவில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டதும்உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு திருவள்ளூர்- புல்லரம்பாக்கம் சாலையில் அஜய்யின் உறவினர்கள்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போதுகொடைக்கானலுக்கு டூருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன் ஒடிசா சென்றது ஏன் என தெரியவில்லை என்றும்உடலை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அபினேஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் கஞ்சாவை வாங்கி வருவதற்காக ஒடிசா சென்றதாகவும்அதில் ஒரு பிரிவினரிடமிருந்து கஞ்சா வாங்கியதால் எதிர் பிரிவினர் எங்களிடம் வாங்காமல் அங்கே ஏன் வாங்கினீர்கள் எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுபணம் கேட்டு மிரட்டியதோடுபணம் தராததால் அஜயை அடித்துக்கொலை செய்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவேகொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.