துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது
சென்னை, நவ. 22: சென்னை விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக துபாய்க்கு போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி...
விருத்தாசலம் மார்க்கத்தில் இயங்கும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றம்: ஸ்லீப்பர் கோச்சை 5 ஆக குறைப்பதால் அதிருப்தி
சென்னை, நவ.22: விருத்தாசலம் மார்க்கத்தில் இயங்கும் சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் ஜனவரி 15ம் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்படுகிறது. இதில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை 8ல் இருந்து 5 ஆக குறைப்பதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்திய ரயில்வே துறையில் நீண்டதூரம் இயங்கும் ரயில்களை அதிக...
கொடுங்கையூர் குப்பை கிடங்கு மறுசீரமைப்பு பசுமை பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட அரசு அனுமதி
சென்னை, நவ.21: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குவிந்துள்ள பழைய கழிவுகளை அகற்றி நிலத்தை மீட்கும் பெரும் திட்டத்திற்கு நிதி திரட்ட பசுமை நகராட்சி பத்திரங்கள் வெளியிட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக சென்னை நகரின் முக்கிய குப்பை கிடங்காக செயல்பட்டு வரும் கொடுங்கையூர் பகுதி, மலை போல குவிந்த கழிவுகளால்...
கோயம்பேடு மார்க்கெட்டில் 16 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு : அதிகாரிகள் நடவடிக்கை
அண்ணாநகர், நவ.21: கோயம்பேடு மார்க்கெட்டில் 16 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சட்ட விரோதமாக சிறுவர், சிறுமியர் வேலை செய்து வருவதாக சைல்டு லேபர் இன்போஸ்மென்ட் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் சைல்டு லேபர் இன்பொஸ்மென்ட் உதவி ஆணையர் பழனி தலைமையில், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள்...
தாய்-மகள் இரட்டை கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை
சென்னை, நவ.21: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பேசில் கார்டன் பகுதியை சேர்ந்த ராமசாமி, ஓமன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆசிரியரான தேன்மொழி (30). இவர் தனது தாய் வசந்தா, சுரபி (6) மற்றும் 6 மாத குழந்தை குண ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் வேலைக்கார பெண்ணாக சத்யா...
வேறொரு ஆணிடம் அடிக்கடி செல்போனில் பேசியதால் காதல் மனைவியை கொன்ற கணவன்: திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்
சென்னை, நவ.19: வேறு ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் காதல் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண் (24). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மதுமிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, கடந்த...
கூடுதல் கட்டணத்தை குறைக்க ரூ.2.5 லட்சம் லஞ்சம் மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
சென்னை, நவ.19: சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வேளச்சேரியில் உள்ள ஊட்டி காய்கறி மற்றும் பழக்கடையின் பங்குதாரராக உள்ளார். இந்த கடையின் கட்டிடத்திற்கு கடந்த 2009 டிசம்பர் முதல் 2011 பிப்ரவரி வரையிலான காலத்தில், கூடுதல் மின் கட்டணமாக 8 லட்சத்து 4,979 ரூபாய் செலுத்த வேண்டும் என மின்வாரிய தணிக்கையில் தெரியவந்தது....
கூடுதல் பணி வழங்கியதால் ஆத்திரம் தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர் சிக்கனார்
அம்பத்தூர், நவ.19: கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முகப்பேர் சாலையில், யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘உங்கள் வங்கியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும்’, என தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் விளையாட்டுக்கு சொல்வதாக...
பூண்டி ஏரியில் இருந்து 2000 கன அடி உபரிநீர் திறப்பு
சென்னை, நவ.18: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2382 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 790 கன அடி...