அரும்பாக்கம், தண்டையார்பேட்டையில் மின்தகன மேடை பராமரிப்பு பணி
சென்னை, ஜூன் 3: அரும்பாக்கம் இந்து மயான பூமியில், மின் மயான தகன மேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று முதல், வரும் 12ம் தேதி வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள வில்லிவாக்கம் அல்லது வேலங்காடு மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தண்டையார்பேட்டை சீதாராம் நகர் மயானபூமி எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் நாளை முதல் வரும் 24ம் தேதி வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள முல்லை நகர் தகன எரிவாயு மேடையினைபயன்படுத்திக் கொள்ளலாம், என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement