சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு
Advertisement
அதன்படி, பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே நிர்வாகம், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை, அரக்கோணம் - சேலம் ஆகிய ரயில்களில் ஏற்கனவே 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் மேற்கண்ட 2 ரயில்களிலும் கூடுதலாக தலா 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பக்தர்களும், அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, சேலம் மார்க்கமாக செல்லும் பயணிகளும் இந்த அறிவிப்பை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Advertisement