ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கமயில் ஜூவல்லரியில் நாளை சிறப்பு விற்பனை
சென்னை, ஆக. 2: தங்கமயில் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கையொட்டி நாளை சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் தமிழகம் முழுவதும் 64 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் செயல்படும் இந்நிறுவனத்தில் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, 100 சதவீதம் எச்.யூ.ஐ.டி. நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. நாளை (ஆக. 3) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காலை 6 மணி முதல் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் தங்கம், வைரம், வெள்ளி போன்ற ஐஸ்வரியம் நிறைந்த பொருட்களை வாங்குவதால் நல்ல பயன் அளிக்கும். இந்த நாளில் வாங்கினால் பல்கி பெருகும் என்பது ஐதீகம். நாளை நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்கள் வாங்கும் 10 கிராம் தங்கத்திற்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசமாகவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வெள்ளி, வெள்ளி நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கு ரூ.2,500 முதல் 10,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 1 முதல் 5 காரட்டிற்கு மேல் வாங்கும் வைர நகைகளுக்கு, ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சத்திற்கு மேல் வெள்ளிப் பொருட்கள், வெள்ளி நகைகள் வாங்கும் அனைவருக்கும், ஐ-போன் 16 மொபைல் நிச்சய பரிசாக வழங்கப்படும்.