ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம்
சென்னை, ஜூலை 29: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மகாவீரபுரத்தை சேர்ந்த 50 பேர் நேற்று முன்தினம் ஒரு பேருந்து மூலம் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். மாலை 6 மணிக்கு கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கோபி (23) உள்ளிட்ட 3 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்த சில மீனவர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கோபி மட்டும் மாயமானார். மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடியும் கோபியின் உடல் கிடைக்கவில்லை. ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் கோபியை தேடி வருகின்றனர்.