கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஜூலை 26: அரியலூரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் அண்ணாசிலை அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், 16 ஆண்டுகால ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி , 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாவட்ட செயலர் அந்தோணி ஆனந்த் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் நடராசன், துணைச் செயலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.