உடையார்பாளையத்தில் மனநலம் பாதித்த வாலிபர் மீட்பு
ஜெயங்கொண்டம், ஜூலை 29: உடையார்பாளையம் கடைவீதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த வாலிபரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடை வீதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் மனநலம் பாதித்து சுற்றிக் கொண்டிருந்தார். அந்த நபரை மீட்ட உடையார்பாளையம் போலீசார் தத்தனூரில் உள்ள அம்மா காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை விசாரித்தபோது அவரது பெயர் ஆல்பன்டெனி (29) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததையடுத்து தனது முகவரியை கூறியதால் நேற்று குடும்பத்தினரிடம் ஆல்பன்டெனியை ஒப்படைத்தனர். 39 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்