சுரைக்காய் வேர்க்கடலை கறி
தேவையான பொருட்கள்
2 கப் சுரைக்காய்
1 கப் வறுத்த வேர்க்கடலை
1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
1/2 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1காய்ந்த மிளகாய்
1கொத்து கறிவேப்பிலை
4 பல் பூண்டு
1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் சாம்பார் பொடி
தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு,, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, நசுக்கிய பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும். அதில் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும்.வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.சுரைக்காயை வெந்தவுடன் பொடித்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விடவும். மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு பிரட்டி எடுத்தால் சுவையான சுரைக்காய் வேர்க் கடலை கறி ரெடி.