தயிர் தம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சீரகச் சம்பா அரிசி - 1/2 கிலோ
தயிர் - 400 கிராம்
விருப்பமான காய்கறிகள் - 1/4 கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சிப் பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
பச்சை மிளகாய் - 3
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 7
ஏலக்காய் - 5
முந்திரி - 10
கொத்தமல்லி & புதினா - ஒரு கைப்பிடி
நெய் - 50 மி. லி.
தேங்காய் எண்ணெய் - ஒரு குழி கரண்டி
உப்பு - தேவையான அளவு
பிரியாணி இலை - 2.
செய்முறை :
காய்கறிகளை தண்ணீர் ஊற்றி பிரியாணி இலை, பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை லேசாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதக்கிய அதே கடாயில் தயிர் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கிளறவும். முட்டை தயிருடன் கலந்து வெந்ததும், சோம்புத் தூள், சீரகத்தூள், வேக வைத்த காய்கறிகளை அதனுடன் சேர்க்கவும். பிறகு அரைத்த வெங்காயம் விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசிக்கு தேவையான தண்ணீரும் சேர்த்து புதினா மல்லி இலைகளை தூவி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து, நெய் ஊற்றி தம் கட்டி இறக்கவும். சுவையான தயிர் தம் பிரியாணி தயார்.