குடை மிளகாய் துவையல்
தேவையானவை:
பெரிய குடைமிளகாய் - 4,
மிளகாய் வற்றல் - 1,
துவரம் பருப்பு,
கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 துண்டு,
தேங்காய்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு, புளி, - ேதவைக்கு ஏற்ப,
தாளிக்க
தேங்காய் எண்ெணய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு உளுத்தம் பருப்பு -சிறிது.
செய்முறை:
குடைமிளகாயை அலம்பி சிறு சிறு துண்டுகளாக்கவும். உள்ளே உள்ள சதைப்பற்றையும் சிறிதாக வெட்டி கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் பெருங்காயம், 1 மிளகாய், பருப்பு வகைகள், தேங்காய் துருவலை வாசனை வரும்படி வறுத்து எடுத்துக் கொண்டு வெட்டிய குடைமிளகாயை துண்டுகள் போட்டு வதக்கவும். சுருள வதக்கிய பின் வறுத்த வற்றுடன் உப்பு, புளி கலந்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். (விரும்பினால் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்).