வரகரிசி புலாவ்
தேவையான பொருட்கள்
வரகரிசி - இரண்டு கப்
பீன்ஸ், கேரட், பட்டாணி,
உருளைக்கிழங்கு - நீளவாட்டில்
நறுக்கியது இரண்டு கப்.
கிரேவிக்கு
தக்காளி -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது
கரம் மசாலா பவுடர் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் அல்லது நெய் - ஒன்றரை கப்.
தாளிக்க
ஏலக்காய், கிராம்பு, பட்டை,
சீரகம், மிளகு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வரகரிசியைக் கழுவி, ஒன்றுக்கு ஒரு கப் வீதம் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்துமல்லி, கரம் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, சீரகம், கிராம்பு, பட்டை, சீரகம், மிளகு தாளிதம் செய்து அரைத்த மசாலா விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கெட்டிப்பட்டவுடன் உதிரியாக வடித்த வரகரிசி சாதத்தை சேர்த்து கிளறி விடவும். சுவையான வரகரிசி புலாவ் தயார். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.