வல்லாரைப் பொடி
தேவையானவை:
வல்லாரைக் கீரை - 3 கப்,
துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி,
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,
கொள்ளு பருப்பு - 2 தேக்கரண்டி,
சீரகம் - 2 தேக்கரண்டி,
எள்ளு - 2 தேக்கரண்டி,
வரமிளகாய் - 10,
பெருங்காயம் - 1 சிறு துண்டு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியை சூடு செய்து பருப்புகள், சீரகம், எள்ளு இவற்றை வாசனை வரும் வரை வறுக்கவும். சிறிது எண்ணெய்விட்டு வரமிளகாய், பெருங்காயம், உப்பையும் தனித்தனியாக வறுக்கவும். வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து நன்கு நீரில் அலசி துணியில் பரப்பி ஈரம் போனவுடன், வெயிலில் உலர்த்தவும். பின்னர் எல்லாவற்றையும் ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.