வாழைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்
2 வெங்காயம்
3 தக்காளி
சிறிதளவுகறிவேப்பிலை இலைகள்
1/2 மூடி தேங்காய்
1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
4-5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
1 பட்டை
3 கிராம்பு 1 ஏலக்காய்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி நறுக்கி எடுத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை தனித் தனியாக விழுது களாக அரைத்து எடுத்து கொள்ளவும். தேங்காயை அரைத்து எடுத்து கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும். பிறகு வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை இலைகள் சேர்க்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.இப்போது வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அரைத்து வைத்த தேங்காய் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.3 விசில் விடவும். சிறிது நேரம் கழித்து திறந்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். வாழைக்காய் குழம்பு தயார்.