உளுந்து களி
தேவையான பொருட்கள்
1 கப்உளுந்து
2 ஸ்பூன்பச்ச அரிசி
சிறிதளவுவெந்தயம்
1கப்கருப்பட்டி (இடித்தது)
2.5 கப்தண்ணீர்
தேவையான அளவுநல்ல எண்ணெய்
சிறிதளவுசுக்கு, ஏலம்
செய்முறை:
உளுந்து, அரிசி, வெந்தயம் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.சிறிதளவு தண்ணீர் விட்டு விட்டு மையாக அரைக்கவும்.பின் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பின் அரைத்த விழுதை சேர்த்து கட்டியில்லாமல் கிண்டவும். பின் களி பதம் வந்ததும் இறக்கவும்.கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.ஏலம் சுக்கு இடித்தது சேர்க்கவும்.பின் களியை தட்டில் வைத்து நடுவில் கருப்பட்டி பாகு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடவும்.சுவையான உளுந்து களி ருசிக்க தயார்