தாபா முறை முட்டை மசாலா
4 முட்டை
1 வெங்காயம்
1 பச்சை மிளகாய்
1 தக்காளி
3/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 மல்லி தூள்
1/4 ஸ்பூன் சீரகப்பொடி
1/2 கரம் மசாலா
கருவேப்பிலை சிறிது
2 ஸ்பூன் சமையல் எண்ணெய்
1பட்டை துண்டு
2 ஏலக்காய்
2 கிராம்
உப்பு தேவையான அளவு
5 முந்திரி பருப்பு
1 ஸ்பூன் கடலை மாவு
செய்முறை:
முட்டை-யை வேகவைத்து தோல் நீக்கி, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பின்னர் முட்டை சேர்த்து வறுத்து வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு பொரிய விடவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.கெட்டியனதும் முந்திரி,கடலைமாவு பொடி கலந்து வறுத்த முட்டை கலந்து மூடி 5 நிமிடங்கள் வரை விட்டு இறக்கவும்.